
India Thrash UAE By 154 Runs In U19 Asia Cup Opener (Image Source: Google)
அண்டர் 19 அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அண்டர் 19 - ஐக்கிய அரபு அமீரக அண்டர் 19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஹர்னூர் சிங் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவருக்கு துணையாக கேப்டன் யாஷ் துல் அரைசதம் விளாசினார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹர்னூர் சிங் 120 ரன்களையும், யாஷ் துல் 63 ரன்களையும் சேர்த்தனர்.