
‘India to win 2-1’ – Harbhajan Singh predicts India-New Zealand T20I series result (Image Source: Google)
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, அந்த தொடரை முடித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்துவிட்டது.
இந்தியா - நியூசிலாந்து இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. நாளை(17), 19 மற்றும் 21 ஆகிய 3 நாட்கள் டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கின்றன.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இந்த தொடரில் வெற்றி பெறுவது 2 அணிகளுக்குமே முக்கியம். அந்தவகையில், டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.