டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நமீபியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளையுடன் முடிவடைகின்றன.
இதில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs நமீபியா
- இடம் - துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளது.
அணியில் ரோஹித், ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கிலும், அஸ்வின், பும்ரா, ஜடேஜா பந்துவீச்சிலும் அசத்தி வருவது அணிக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
அதேபோல் நமீபியா அணி நடப்பு சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
மேலும் இன்று நடைபெற்றுவரும் ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் என்பது தெரியவரும் என்பதால், இப்போட்டியின் முடிவைப் பொறுத்தே நாளைய போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
உத்தேச அணி
இந்தியா - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா
நமீபியா - ஸ்டீபன் பார்ட், கிரேக் வில்லியம்ஸ், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கே), டேவிட் வைஸ், ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன், மைக்கேல் வான் லிங்கன், கார்ல் பிர்கென்ஸ்டாக், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ்
Also Read: T20 World Cup 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, கெர்ஹார்ட் எராஸ்மஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, டேவிட் வைஸ்
- பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரூபன் டிரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now