Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

டி20 உலகக்கோப்பை தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan October 22, 2021 • 22:08 PM
India vs Pakistan – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
India vs Pakistan – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Cricketnmore)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரான நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. 

அதிலும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மறுநாள் (அக்.24) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனுபவமும், இளமையும் கலந்த கலவையாகயும், உலகக்கோப்பை கேப்டன் மகேந்திர சிங் தோனியை ஆலோசகரகாவும் கொண்டு இத்தொடரை எதிர்கொள்கிறது.

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் ரோஹித், ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், ரிஷப் பந்த் என அதிரடி வீரர்கள் இருப்பது நிச்சயம் எதிரணிக்கு சற்று பயத்தை கண் முன்னே கொண்டு வரும். 

அதேபோல் பந்துவீச்சில் பும்ரா, ஷமி, ஷர்துல், புவனேஷ்வர்குமார், ஆகியோருடன் அஸ்வின், ராகுல் சஹார், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே நிபுணர்கள் கணித்துள்ளனர். 

அதற்காக பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் அந்த அணி கடைசியாக விளையாடிய அனைத்து டி20 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்துள்ளது. 

மேலும் பேட்டிங்கில் ஃபகர் ஸமான், முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோரும், பந்துவீச்சில் ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் இருப்பது அணிக்காக வெற்றி வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பதால், இப்போட்டியில் அதனை பாகிஸ்தான் அணி முறியடிக்குமா? என்று எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 5
  • இந்தியா வெற்றி -5
  • பாகிஸ்தான் வெற்றி - 0

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்/இஷான் கிஷன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஆர் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் ஆசம், ஃபகார் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், ஃபகார் ஸமான், பாபர் ஆசம்
  • ஆல் -ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, இமாத் வாசிம்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷாஹீன் அஃப்ரிடி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement