
டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்துவிட்டன. இந்த தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றுவிட்டன. இதில் இரு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றில் தோல்விகளை சந்தித்து, வெளியேறிவிட்டது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியயாவை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ளது. அதேபோல் நாளைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மெல்போர்னில் மதியம் 1:30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அணியில் பேட்டிங் குறைத்து எந்த கவலையும் இல்லை. பந்துவீச்சுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் அந்த குறையை தீர்க்க பிட்சே முன்வந்துள்ளது. ஆம், மெல்போர்ன் களம் வேகத்திற்கு சாதகமாக இருக்கும். எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் பந்துகளை இங்கு சிறப்பாக வீச முடியும்.