பாக்ஸிங் டே டெஸ்டில் விஹாரிக்கு அணியில் இடமுண்டா?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி “பாக்ஸிங் டே” போட்டியாக 26ஆஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏற்கனவே ரோஹித், ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர்.
அதேவேளையில் மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரிக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. மேலும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் எந்த மாற்றங்கள் இருக்கும் என்றும், யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.
Trending
அந்த வகையில் காயமடைந்த ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ராகுலுடன் மாயங்க் அகர்வால் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவருக்கு இடம் கிடைக்கும் பட்சத்தில் ரஹானே இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது.
இந்நிலையில் முக்கிய மாற்றமாக விஹாரிக்கு அணியில் கிடைக்குமா? என்ற கேள்வி அதிகளவில் உள்ளது. ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது அவருக்கு இடமளிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்ட அவர் தென் ஆப்பிரிக்க பயணத்தில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே இந்த தொடரில் அவரை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் ஆகியோரது கூட்டணியோடு பவுலிங் யூனிட் களமிறங்கும். இதன் காரணமாக மிடில் ஆர்டரில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மென் இடம் பெறுவார் என்பதால் நிச்சயம் விகாரிக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதே வேளையில் ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடி உள்ளதால் அவருக்கு இடம் கிடைக்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் ரஹானே தனது வாய்ப்பை தவறவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள விஹாரி அதில் 11 போட்டிகளை அயல்நாட்டு மண்ணில் விளையாடியுள்ளார். அப்படி அவர் அயல் நாட்டில் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now