Advertisement

India vs West Indies, 2nd ODI – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
India vs West Indies, 2nd ODI – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
India vs West Indies, 2nd ODI – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 07, 2022 • 01:37 PM

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 07, 2022 • 01:37 PM

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Trending

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் போட்டியிலேயே இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கம்பேக் கொடுத்த வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். 

இருப்பினும் பேட்டிங்கில் முன்னாள் கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

மேலும் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள் என்பதால் நிச்சயம் இந்திய அணியின் பேட்டிங் வலிமை கூடும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி வீரர்கள் மீண்டும் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அதேசமயம் கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அணியின் நட்சத்திர வீரர்கள் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், பிராவோ, பொல்லார்ட் என அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தாது. 

ஆனால் ஜேசன் ஹோல்டர் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து வகையிலும் அணிக்கு உதவி வருதுவது மட்டுமே வெஸ்ட் இண்டீஸுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இதனால் அடுத்த போட்டியில் அந்த அணி மீண்டும் வெற்றிக்கு போராடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 134
  • இந்தியா வெற்றி - 65
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 63
  • முடிவில்லை - 6

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கேட்ச்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்/ கே.எல். ராகுல், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

வெஸ்ட் இண்டீஸ் - பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (வாரம்), டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேட்ச்), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன், கெமர் ரோச்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல்
  • ஆல்-ரவுண்டர்கள் - கீரன் பொல்லார்ட், வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள் - அகீல் ஹொசைன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement