WTC Final: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜடேஜா!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையியேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். பின்பு, தனிமைக்காலம் முடிந்து 2 நாள்களுக்கு முன்பு மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
அதன்படி விராட் கோலி தலைமையில் ஒரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையில் மற்றொரு அணியுமாக பிரிந்து பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் நேற்றைய தினம் ரிஷப் பந்த் சதமடித்து, சுப்மன் கில் அரைசதம் அடித்தும் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் இருந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 76 பந்துகளில் 56 ரன்களைச் சேர்த்து அசத்தினார். மேலும் பந்து வீச்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
.@imjadeja gets to his half-century (54* off 76) as play on Day 3 of the intra-squad match simulation comes to end.@mdsirajofficial is amongst wickets with figures of 2/22.#TeamIndia pic.twitter.com/3tIBTGsD3L
— BCCI (@BCCI) June 13, 2021
இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் குறித்த காணொளியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இக்காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now