
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் இந்திய அணி 3 - 0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி கண்டது.
இந்த தொடரின் முடிவு சர்ச்சையுடன் தான் இருந்தது. 3ஆவது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையில் ரன் அவுட் செய்து விக்கெட் எடுத்தது சர்ச்சையை கிளப்பியது. ஏமாற்றி வெற்றி பெற்றார்கள் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டினர். இந்த சர்ச்சையே ஓயாத நிலையில் தற்போது புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.
இந்திய வீராங்கனை தானியா பாட்டியா தனது உடமைகளை இங்கிலாந்து ஓட்டல் அறையில் திருடிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த தானியா, " இந்திய அணி மேரியட் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன. எனது தனிப்பட்ட அறையில் யாரோ ஒருவர் நுழைந்து பணம், கார்டுகள், வாட்ச்சுகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளை திருடிச்சென்றுள்ளார்.