
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். இவர் இந்திய அணிக்காக 7 டெஸ்டுகள், 65 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் குல்தீப் யாதவ் விளையாடியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற இந்திய அணியிலும் இடம்பெற்று ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடினார்.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ் - கடந்த வருடம் 5 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை. 2019 ஐபிஎல் முதல் மிக மோசமாகப் பந்துவீசி வருவதால் இந்திய அணியிலும் தன்னுடைய இடத்தை அவர் இழந்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குல்தீப் யாதவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஃபீல்டிங் செய்தபோது ஏற்பட்ட அந்தக் காயம் தீவிரமாக இருந்ததால் அதற்கு மேலும் ஐபிஎல் போட்டியில் பங்குபெற முடியாத சூழல் உருவானது.