Advertisement

2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு!

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவின் பெயரை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 24, 2022 • 16:10 PM
India's Smriti Mandhana Named ICC Women's Cricketer Of 2021
India's Smriti Mandhana Named ICC Women's Cricketer Of 2021 (Image Source: Google)
Advertisement

கடந்த வருடம் ஸ்மிருதி மந்தனா, 22 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 5 அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். டிரா ஆன அந்த ஆட்டத்தில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார். 

இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக மந்தனாவின் பெயரை அறிவித்துள்ளது ஐசிசி. கடந்த ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனையாகவும் அவரைச் சமீபத்தில் ஐசிசி தேர்வு செய்தது. 2018-ல் சிறந்த வீராங்கனையாகவும் சிறந்த ஒருநாள் வீராங்கனையாகவும் மந்தனா தேர்வானார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெரிக்கு அடுத்ததாகச் சிறந்த வீராங்கனைக்கான விருதை இருமுறை வென்ற வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார். 

Trending


மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த 25 வயது மந்தனா, 2013 முதல் 4 டெஸ்ட், 62 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement