Advertisement

புதிய வகை கரோனா பரவல்; ரத்தாகுமா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement
India's Tour Of South Africa: BCCI To Await Centre's Decision Over New COVID Variant, Say Sources
India's Tour Of South Africa: BCCI To Await Centre's Decision Over New COVID Variant, Say Sources (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 26, 2021 • 07:03 PM

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன்முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 26, 2021 • 07:03 PM

இந்தப் புதிய வைரஸ் ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவிவிட்ட நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட இந்தப் புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

Trending

இந்தப் புதிய வகை வைரஸ் குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், அறிவியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் முடிந்தபின், டிசம்பர் 8ஆம் தேதியே இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படத் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி முதல் தொடர் தொடங்குவதால் 10 நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால், முன்கூட்டியே செல்கிறார்கள்.

ஆனால், தற்போது இந்திய ஏ அணியில் விளையாடிவரும் சில வீரர்களை அங்கேயே தங்கவைத்து, இந்திய அணியில் முக்கியமான வீரர்களை மட்டும் அனுப்பவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்கப் பயணத்தில் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17ஆம் தேதியும், அதன்பின் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங்டே டெஸ்ட்டாக சென்சூரியனிலும், 2022, ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுனில் 3ஆவது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க. சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலை வரவழைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement