
India's Tour To Sri Lanka: Increasing Covid Cases In Island Nation A Worry (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி சமீபத்தில் அறிவித்தார். இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் நேற்றைய தினம் சுமார் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.