
Injured Bavuma ruled out; Maharaj and Miller to lead white-ball teams in England and Ireland (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்டுகளிலும் அயர்லாந்தில் 2 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வெள்ளைப் பந்து அணியின் கேப்டன் பவுமா, இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை.
இதனால் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணிக்கு கேஷவ் மஹாராஜும் டி20 அணிக்கு டேவிட் மில்லரும் புதிய கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பவுமாவால் எட்டு வாரங்களுக்குப் பிறகே விளையாட முடியும் எனத் தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 19 அன்று தொடங்குகிறது.