
Inzamam-ul-Haq undergoes angioplasty after cardiac arrest, condition stable now (Image Source: Google)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக். இவருக்கு கடந்த மூன்று நாள்களாக நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளில் அவருடைய உடல்நிலையில் எவ்விதப் பாதிப்பும் இல்லை என அறியப்பட்டது.
எனினும் நேற்று மேற்கொண்ட மற்றொரு பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்ததது. இதையடுத்து உடனடியாக நேற்று மாலை, இன்ஸமாமுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021