
IPL 2021: 2 more groundstaff, one plumber test positive for Covid-19 at Wankhede (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆறு மைதானங்களில் மட்டும் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒன்றான மும்பை வான்கேடேவில் வேலை செய்யும் ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இதனால் ஹைதராபாத், இந்தூர் மைதானங்களைக் கூடுதல் மைதானங்களாகப் பயன்படுத்தலாம் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் இன்று வான்கேடே மைதானத்தில் பணி செய்யும் மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.