
Cricket Image for ஐபிஎல் 14: ஐசிசி-க்கு பாடம் புகட்டுமா பிசிசிஐயின் புதிய விதிமுறைகள்? (IPL (Image Source: Google))
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் இந்த சீசனுக்கான புதிய விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு மூன்றாம் நடுவர் பரிசீலனைக்கு வரும் முடிவுகளில் சாப்ட் சிக்னல்
விதிமுறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நடுவர் சொல்வதே
இறுதி முடிவாகும்.
ஏனெனில் அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் சாப்ட்
சிக்னல் தொடர்பான சர்ச்சை எழுந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.