Advertisement

ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கெவின் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement
IPL 2021: CSK's Ruturaj Gaikwad Becomes Youngest Orange Cup Holder In League's History
IPL 2021: CSK's Ruturaj Gaikwad Becomes Youngest Orange Cup Holder In League's History (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 15, 2021 • 10:19 PM

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் விளையாடி வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 15, 2021 • 10:19 PM

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

Trending

இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களைச் சேர்த்ததன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைச் சேர்த்த வீரருக்கான ஆரஞ்சு தோப்பியை தன்வசப்படுத்தினார். 

முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் 626 ரன்களைப் பெற்று முதலிடத்தில் இருந்த நிலையில், கெய்க்வாட் 635 ரன்களைக் குவித்து தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement