Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ரிஷப் பந்த்!

நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 05, 2021 • 12:49 PM
IPL 2021: Delhi Capitals can be sure of finishing in top two, says Pant
IPL 2021: Delhi Capitals can be sure of finishing in top two, says Pant (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதனைத் தொடர்ந்து 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

Trending


இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில்,“இந்த போட்டி கடினமான போட்டியாகவே அமைந்தது. ஈசியாக இருந்த போட்டியை நாங்களே கடினமாக மாற்றிக்கொண்டோம். இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. 

இந்த போட்டியின்போது பவர் பிளே ஓவர்களில் நாங்கள் ரன்களை கொடுத்தாலும் அதன் பிறகு சிறப்பாக பந்து வீசினோம். பின்னர் இறுதி நேரத்தில் சிஎஸ்கே வீரர்கள் சற்று அதிகமான ரன்களை குவித்தனர். ஆனால் பேட்டிங்கின்போது நாங்கள் சிறப்பாக துவங்கியதாகவே நினைக்கிறோம். 

இது போன்ற லோ ஸ்கோரை துரத்தும்போது ஓபனிங் என்பது மிகவும் அவசியம். அந்த வகையில் ப்ரித்வி ஷா சிறப்பான தொடக்கத்தை அளித்து ஆட்டமிழந்தார். அதே போன்று தவானும் தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து விட்டு சென்றார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மிடில் ஓவர்களில் நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதியில் ஹெட்மையர் எங்களுக்காக போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று மேலும் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி தற்போது முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement