
IPL 2021: Delhi Capitals restrict CSKK by 136 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு வழக்கம் போல் ஃபாஃப் - கெய்க்வாட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஃபாஃப் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கெய்க்வாட் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ராபின் உத்தப்பா 19, மொயீன் அலி 5 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு - எம் எஸ் தோனி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.