
IPL 2021: Delhi Capitals win by 3 wickets against CSK (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணி அம்பத்தி ராயுடுவின் அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்தது. இதில் அம்பத்தி ராயுடு 55 ரன்களைச் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷிகர் தவான் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் பிரித்வி ஷா 18, ஸ்ரேயாஸ் ஐயர் 2, ரிஷப் பந்த் 15, ரிபால் படேல் 18 என அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.