ஐபிஎல் 2021: தோனியின் சிக்சரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 44ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் சிஎஸ்கேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
Trending
சென்னை அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது.
இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 44 ரன்களில் ஜேசன் ஹோல்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் வந்த மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தர்.
பின்னர் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸும் 41 ரன்களில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு - எம் எஸ் தோனி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதிலுல் மகேந்திர சிங் தோனி சிக்சர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் 19 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளைப் பெற்று நடப்பு சிசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
Win Big, Make Your Cricket Tales Now