ஐபிஎல் 2021: பார்வையாளர்களுக்கான நெறிமுறைகள்!
ஐபிஎல் இரண்டாம் பாதி போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமவதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான கட்டுபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. 27 நாட்கள் நடக்கும் இத்தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
Trending
இந்தபோட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
துபாய்
துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தியிருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
அபுதாபி
அபுதாபி மைதானத்தில் ரசிகர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ், கரோனா பரிசோதனை சான்றிதழ் என இரண்டும் வைத்திருக்க வேண்டும்.
12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் தேவையில்லை. ஆனால், கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம்.
சார்ஜா
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சார்ஜாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழுடன், 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சான்றிதழ் அவசியம். அதுபோலவே முகவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டு
Win Big, Make Your Cricket Tales Now