
IPL 2021: It was a bad toss to lose to start off, says Dhoni after defeat (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47ஆவது லீக் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது ருதுராஜ் கெய்க்வாட் சதத்தின் மூலமாகவும், இறுதி நேரத்தில் ஜடேஜா விளையாடிய அதிரடி ஆட்டம் காரணமாகவும் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கத்திலேயே அதிரடி காட்டியது.
இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஷிவம் தூபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம் அடித்தார்.