
IPL 2021: Jadeja, Pujara, Moeen Ali arrive in Dubai, to undergo six-day quarantine (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்றது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
மேலும் நேற்று முந்தினம் தொடங்க இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு படையெடுத்து வருகின்றனர்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, சட்டேஸ்வர் புஜாரா, மொயீன் அலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இன்று துபாய் வந்தடைந்தனர். மேலும் துபாய் வந்த இவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஆறு நாள்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.