
IPL 2021: KKR captain Eoin Morgan confirms participation in UAE leg (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடத்துப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரைக் கருத்தில் கொண்ட பல நாட்டு வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
அதேசமயம் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் வீரர்களை அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளன. அந்த வரிசைல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.