
IPL 2021: Kolkata Knight Riders finishes 171 runs in their 20 overs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயரும் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரிபாதி 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.