Advertisement

நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் போராடிய விதம் பெருமையாக உள்ளது - ஈயான் மோர்கன்!

ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியி்ல சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம், செயல்பாடு ஆகியவற்றை நினைத்து பெருமையாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி்ன் கேப்டன் மோர்கன் தெரிவி்த்தார்

Advertisement
IPL 2021: Morgan, McCullum proud of KKR fightback
IPL 2021: Morgan, McCullum proud of KKR fightback (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 16, 2021 • 01:17 PM

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2014ஆம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது. 3ஆவது பட்டத்துக்காக போராடிய கொல்கத்தா அணி 27 ரன்களில் சிஎஸ்கே அணியிடம் தோல்விஅடைந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 16, 2021 • 01:17 PM

இந்தியாவில் நடந்த இந்த சீசனின் முதல் சுற்றில் 7 போட்டிகளில் 2 வெற்றிகள், 5 தோல்விகள் என பின்தங்கியிருந்தது கொல்கத்தா அணி. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் கொல்கத்தா அணியினரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது.

Trending

ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷமான பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கையாண்டது இறுதிப்போட்டி வரை முன்னேற காரணமாக அமைந்தது.

இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து கேப்டன் மோர்கன் கூறுகையில், “நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் போராடிய விதம், விளையாடியவிதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். எங்கள் விடாமுயற்சியும், போராட்டமும்தான் எங்களின் அடையாளம். எங்கள் அணியில் உள்ள வீரர் அற்புதமாக விளையாடினார்கள், சிறப்பாகச் செயல்பட்டார்கள்.

வெங்கடேஷ், ஷுப்மான் கில் ஆட்டம் பிரமாதமாக இருந்து. அதிலும் வெங்கடேஷுக்கு ஐபிஎல் புதிய அணுபவம். அவரின் ஆட்டம் எங்களின் தரமான பேட்டிங்கிற்கு அடையாளமாக இருந்தது. திரிபாதி காயத்தால் விளையாட முடியாமல் போனது பெரிய இழப்பாக இருந்தது” என்று தெரிவித்தார். 

கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் கூறுகையில் “எங்கள் அணி வீரர்கள் அனைவரின் செயல்பாடும் மிகப்பெருமையாக இருக்கிறது. சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கும், தலைவர்களுக்கும் வாழ்த்துகள். இது அற்புதமான பயணம், சில விஷயங்களை அனுபவங்களை நீண்ட நாட்களுக்கு நினைத்துப் பார்க்க முடியும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இறுதிப்போட்டியில் சிக்கும்போது, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியமானது. ஆனால், இதில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாகச்செயல்பட்டார்கள். எங்கள் அணியின் உரிமையாளர்களும் முழு ஆதரவு அளித்தார்கள்” எனத் தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement