
IPL 2021: Mumbai Indians mentor Sachin Tendulkar joins team for training session (Image Source: Google)
ஐபிஎல் 2021: மும்பை அணியுடன் இணைந்த சச்சின்!
கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்நிலையில் மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர், அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013 முதல் மும்பை அணியின் ஆலோசகராக சச்சின் பணியாற்றி வருகிறார்.