
IPL 2021: Mumbai indians restrict PBKS by 135 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 42ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் மந்தீப் சிங், கிறிஸ் கெயில், கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - தீபக் ஹூடா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி அசத்தினர். பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.