
IPL 2021: Mumbai Indians Start Off With First Training Session In UAE (Image Source: Google)
கரோனா தொற்றால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
அதன்படி தொடங்கும் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இதற்காரணமாக கடந்த வாரமே இரு அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, 6 நாள்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை அணி நேற்று முந்தினமே பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தது.