
IPL 2021 Points Table After Sunrisers Hyderabad's Win Over Rajasthan Royals (Image Source: Google)
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கேப்டன் வில்லியம்சன் 51 ரன்களும் அபிஷேக் சர்மா 21 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
ஐபிஎல் 2021 போட்டியில் அனைத்து அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. நேற்றைய ஆட்டத்தின் முடிவால் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.