Advertisement

ஐபிஎல் 2021: படிக்கல்லை பாராட்டிய பிரக்யான் ஓஜா!

சென்னை அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபியின் தேவ்தட் படிக்கல்லை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 24, 2021 • 22:23 PM
IPL 2021: Pragyan Ojha praises Devdutt Padikkal
IPL 2021: Pragyan Ojha praises Devdutt Padikkal (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 70 ரன்களைச் சேர்த்தார். 

Trending


இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல்லை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார். 

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து கூ செயலியில் பதிவிட்டுள்ள பிரக்யான் ஓஜா, “ஒரு தரமான வீரர் சிறப்பாக செயல்படுவதை பார்த்து சோர்வடையவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement