
IPL 2021: Ravichandran Ashwin Bags 250th T20 Wicket (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 121 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.