ஐபிஎல் 2021: ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றிய சாம்சன்!
2021 சீசனில் சஞ்சு சாம்சன் 10 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சஞ்சு சாம்சன், ஷிகர் தவான், கேஎல் ராகுல், டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிலும் நடப்பு சீசன் தொடங்கியதில் இருந்து தவான் ஆதிக்கம் செலுத்து வருகிறார். அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கும் ஆரஞ்ச் தொப்பியை தொடர்ந்து தன்வசம் வைத்திருந்தார்.
Trending
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 82 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 10 போட்டிகளில் 433 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் தவானிடம் இருந்த ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாக்கியுள்ளார். தவான் 10 போட்டிகளில் 430 ரன்கள் அடித்துள்ளார். கேஎல் ராகுல் 9 போட்டிகளில் 401 ரன்கள் அடித்துள்ளார். டு பிளெசிஸ் 394 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 362 ரன்களும் அடித்துள்ளனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் நேற்றையை போட்டியில் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்தும் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now