
IPL 2021: SRH's Wriddhiman Saha, T Natarajan Start Training With Kane Williamson & Co (Image Source: Google)
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, நாளை (செப்டம்பா் 19) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜன் சக அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் போது காயம் காரணமாக விலகிய நடராஜன் அதன்பின், இங்கிலாந்து மற்றும் இலங்கை தொடர்களிலும் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார்.