
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுவிட்டது. சிஎஸ்கே அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் அணிக்கான 2ஆவது தகுதிச்சுற்றில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.
முதல் தகுதிச் சுற்றில் சிஎஸ்கே அணியிடம் 4 விக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வி அடைந்தது. கடைசி இருபோட்டிகளில் தோல்வி அடைந்ததால் அணி வீரர்களிடையே நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப், “இன்று எங்களுக்கு மிகப்பெரிய நாள் காத்திருக்கிறது. எவ்வாறு அழுத்தத்தை, நெருக்கடியை சமாளிக்கப்போகிறோம் என்பதில் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியும் அழுத்தமானதுதான், இருந்தாலும் இந்த ஆட்டம் எங்களுக்கு சற்று வித்தியாசமானது. அமைதியாக இருந்து, நெருக்கடியான நேரத்தில் மனநிலையை ஒருமுகத்தோடு வைத்திருப்பது முக்கியம்.