ஐபிஎல் 2021: சிஎஸ்கே அசத்தல் பந்துவீச்சு;134 ரன்னில் சுருண்டது ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 44ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய் 2 ரன்களிலும், வில்லியம்சன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமலித்தனர். இருப்பினும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விருத்திமான் சஹா 44 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்ளை எடுத்து ஆட்டமிழந்தார்.
Trending
அதன்பின் வந்த வீரர்களும் சிஎஸ்கேவின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now