
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் உலகின் பல முன்னணி வீரர்களை ஆட்டமிழக்க வைத்த நடராஜன் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார்.
பின்பு ஆஸ்திரேலியா பயணித்த இந்திய அணியின் சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நடராஜன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பின்பு இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும், நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். இந்த ஐபிஎல் தொடரின் பாதியிலேயே அவர் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்ற அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் மெல்ல மெல்ல பயிற்சிகளை தொடர்ந்தார்.