Advertisement

ஐபிஎல் 2021: கேகேஆரை புரட்டியெடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த ஆர்சிபி!

ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Bharathi Kannan
By Bharathi Kannan April 18, 2021 • 19:22 PM
IPL 2021: Third Consecutive Win For RCB
IPL 2021: Third Consecutive Win For RCB (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தர். 
 
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கிளென் மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததோடு, அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது.
 
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைச் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78 ரன்களையும், டி வில்லியர்ஸ் 76 ரன்களையும் சேர்த்தனர்.
 
இதனையடுத்து இமாலய இலக்கை துரத்திய கேகேஆர் அணி வீரர்கள் சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன், ரஸ்ஸல் என அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர். 
 
இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 
 

Trending



Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement