
IPL 2021: Venkatesh Action Fifty; KKR set a target of 166 runs! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிப்பாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிப்பாதி 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.