ஸ்டீபன் ஃபிளெம்மிங்கின் குளோன் வெங்கடேஷ் - டேவிட் ஹசி புகழாரம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஆட்டக்கார்ர வெங்கடேஷ் ஐயர், நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபென் ஃபிளெம்மிங்கின் குளோனிங் போன்று இருக்கிறார், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று அணியின் கேகேஆர் அணியின் ஆலோசகர் டேவிட் ஹசி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 2ஆவாது தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இதில் அதிரடியாக ஆடும் வழக்கமுடைய வெங்கடேஷ் நேற்றைய போட்டியிலும் அதை வெளிப்படுத்த தவறவில்லை. 41பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 4பவுண்டரி அடங்கும். வெற்றிக்கு அடித்தளமிட்ட வெங்கடேஷுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
Trending
கொல்கத்தா அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வெங்கடேஷ் உருவெடுத்து வருகிறார்.
வெங்கடேஷ் குறித்து கொல்கத்தா அணியின் ஆலோசகரும், ஆஸி. முன்னாள் வீரருமான டேவிட் ஹசி கூறுகையில், “வெங்கடேஷ் ஐயர் என்ற வீரரைக் கண்டுபிடித்திருக்கிறோம், அருமையான வீரர் மட்டுமல்ல அற்புதமான மனிதர். தான் சந்திக்கும் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடத் தொடங்கி விடுகிறார் வெங்கடேஷ். அவர் அடித்த சில சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டு, வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.
எங்களின் தொடக்க வீரர்கள் கில், வெங்கடேஷ் இருவரும் போட்டிபோட்டு சிறப்பாக ஆடுகிறார்கள். தரவரிசையில் சிறந்தவீரராக வெங்கடேஷ் உள்ளார், உயரமாக, நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃபிளெம்மிங் குளோன் போன்று வெங்கடேஷ் உள்ளார் என நான் நம்புகிறேன். வெங்கேடஷுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட திறமையுள்ள வீரர்களை களமிறக்குவோம். ரஸ்ஸலும் காயத்திலிருந்து குணமடைந்துவிடுவார். முதலில் மருத்துவ குழுவினருடன் பேசியபின்பு தெரியவரும், பயிற்சியில் ரஸ்ஸல் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். நிச்சயமாக ரஸ்ஸல் விளையாட வாய்ப்புள்ளது. சஹிப் அல் ஹசனும் அணியில் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now