
இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த வேளையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகளும் இரண்டாவது கட்டமாக நான்கு மாதங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்பது குறித்த கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக்,ஐபிஎல் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் ? என்பது குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ஐபிஎல் போட்டியில் இரண்டாவது பாதி ஆட்டங்கள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெறுவதால் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறை கோப்பையை கைப்பற்ற கூடுதலான வாய்ப்புகள் இருக்கிறது.