
இந்தாண்டு ஐபிஎல் தொடர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்துள்ளது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விகளுக்கு காரணம் வார்னரை அந்த அணி புறக்கணிப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வந்த ஹைதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கோப்பையையும் வென்று கொடுத்தவர் டேவிட் வார்னர். ஆனால் இந்த ஆண்டு அணி நிர்வாகத்திற்கும் வார்னருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டேவிட் வார்னரும் ஒதுக்கப்பட்டு வருகிறார்.
இதற்கு வார்னரின் மோசமான ஃபார்மும் காரணமாக கூறப்படுகிறது. இந்தாண்டு 8 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் அனுபவ வீரர் என்றும் பாராமல் அவரை உட்காரவைப்பது சரியல்ல என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கேற்றார் போல ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். ராயும் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக விளையாடி முடித்தார்.