அஸ்வின் செயல் ஒரு அவமானம் - வார்னே காட்டம்!
ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் அவமானதுக்குரியது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் போது டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2ஆவது ரன் ஓடினார்.
Trending
பொதுவாக பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும், விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைபிடிக்கப்படுகிறது. மன்கட்அவுட் செய்யும் முன் நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும்.
ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டியஅவசியமில்லை. ஆனால், மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர்கடைபிடிப்பதில்லை. டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார், அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார்.இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியவின் ஷேன் வார்னே அஸ்வின் 2ஆவது ரன் ஓடிய செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தத் விவகாரத்தாலும், அஸ்வினாலும் இந்த உலகம் பிளவுபடக்கூடாது. சுருக்கமாகச் சொல்வதென்றால், அஸ்வின் செயல் அவமானம், இதுபோல் ஒருபோதும் நடக்கக்கூடாது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஏன் அஸ்வின் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஆளாகிறார். கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு அஸ்வின் மீது குற்றம்சாட்ட ஒவ்வொரு உரிமையும் இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதன் காரணமாக தற்போது அஸ்வின் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now