
கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்ட சூழலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. லக்னோ அணி 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 16 புள்ளிகளுடன் ஆர்சிபி 4ஆவது இடத்தையும் உறுதி செய்துவிட்டன. இந்த அணிகளுக்கான ப்ளே ஆஃப் சுற்று வரும் மே 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் முதல் குவாலிஃபையர் போட்டி வரும் மே 24 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. இதற்கு காரணம் புயல் தான்.