ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த சீசனில் 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.
அதன்படி லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்தது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ள இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இந்த ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதில் 590 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக களமிறங்கும் லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் ஏலத்திற்கு முன் எடுத்தது. அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என பெயர் சூட்டியதுடன் லோகோவையும் வெளியிட்டது.