ஐபிஎல் 2022: தொடருக்கான போட்டி வடிவங்களை வெளியிட்டது பிசிசிஐ!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி வடிவங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி வடிவங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இந்தாண்டு மெகா ஏலம், 2 புதிய அணிகள் சேர்ப்பு என பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளுக்கான அட்டவணைகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில் பிசிசிஐ தற்போது இறுதி செய்துள்ளது.
Trending
அதன்படி 15ஆவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை அனைத்து லீக் போட்டிகளும் மும்பையில் உள்ள வான்கேடே, டி ஒய் பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் புனே மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுகள் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டப்பட்டிருக்கிறது.
தற்போது 10 அணிகள் மோதும் இந்த தொடரிலும் மொத்தம் 70 லீக் போட்டிகளே நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் மோதவுள்ளது. ஆனால் பழைய முறைப்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதுவது போன்று அல்ல. அதற்கும் பழைய முறைப்படி 2011க்கு சென்றுள்ளது பிசிசிஐ.
அதாவது மொத்தமுள்ள 10 அணிகளையும் ஏ, பி என 2 குரூப்களாக பிரித்துக்கொள்வார்கள். அதில் ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதிக்கொள்ளும். அதன் பின்னர் மற்றொரு குரூப்பில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும். மற்ற 4 அணிகளுடனும் தலா ஒரே ஒரு முறை மட்டும் மோதிக்கொள்ளும்.
உதாரணத்திற்கு சிஎஸ்கே அணி, ஏ குரூப்பில் இடம்பெற்றிருந்தால், அதில் மீதமுள்ள 4 அணிகளுடனும் 2 முறை மோதினால் 8 போட்டிகள் ஆகும். இதன் பின்னர் 'பி' குரூப்பில் உள்ள 5 அணிகளில் ஒரே ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும், மற்ற 4 அணிகளுடன் ஒரே ஒரு முறை மட்டும் மோதும். இதன் மூலம் சிஎஸ்கே அணி 14 லீக் போட்டிகளை ஆடி முடித்துவிடும்.
ஆனால் எந்தெந்த அணிகள், எந்தெந்த குரூப்களில் இடம்பெற போகிறது, எந்த அணியுடன் ஒரே ஒரு முறை மோதவுள்ளது போன்ற விவரங்களை பிசிசிஐ விரைவில் வெளியிடும். டி20 உலகக்கோப்பையில் வருவது போன்று குரூப்களுக்கு இடையே மட்டும் லீக் போட்டிகளை முடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அனைத்து அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதற்காகவே பிசிசிஐ இதனை செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now