ஐபிஎல் 2022: டெல்லி அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
15 ஆவது சீசனின் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ், 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு, நிதானமாக 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிருத்வி ஷா (61), ரிஷப் பந்த் (39) ரன்கள் எடுத்தனர்.
Trending
பிறகு விளையாடிய லக்னோ அணியில், தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினார்கள். டி காக் துவக்கம் முதலே அதிரடியை காட்ட, கே.எல்.ராகுல் 24 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு வந்த எவின் லூயிஸ் (5), அதிரடியாக ஒரு பக்கம் விளையாடி கொண்டிருந்த டி காக் (80) ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் போட்டி சற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.
கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், க்ருனால் பாண்டியா 19வது ஓவரில் 13 ரன்கள் சேர்ந்த்து வெற்றிக்கு அடித்தளம் போட்டார். இருந்தாலும் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே தீபக் ஹூடா பெவிலியன் திரும்ப, பிறகு வந்த ஆயுஷ் படோனி இரண்டே பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார்.
இதற்கு பின் பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், "இந்த போட்டியில் பனி காரணங்கள் இருந்தாலும், நாங்கள் முதல் இன்னிங்சிலேயே 10-15 ரன்கள் குறைவாக தான் அடித்திருந்தோம். டெத் ஓவர்களின்போது அவர்களுக்கு ஆவேஷ் கானும், ஹோல்டரும் இருந்ததால் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. எங்களால் கூடுதலாக 10-15 ரன்கள் அடிக்க முடியவில்லை.
போட்டி எந்த திசையில் சென்றாலும், நாங்கள் இறுதி ஒவரின் இறுதி பந்துவரை எங்களின் 100 சதவீதத்தையும் கொடுக்க நினைத்தோம். ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். பவர்ப்ளேவில் எங்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்காமல் போனாலும், 6 ஓவர்களும் எங்களுக்கு நன்றாகவே அமைந்தது. அடுத்துதான் ஆட்டம் மாறியது. ஸ்பின்னர்கள் அவர்கள் வேலையை சிறப்பாக செய்தனர். ஆனால் அந்த 10-15 ரன்கள் தான் இறுதியில் பிரச்சனையாக அமைந்தது" என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now