ஐபிஎல் 2022: வீரர்களுக்கு மார்ச் 8ஆம் தேதிவரை காலக்கெடு - பிசிசிஐ
ஐபிஎல் அணிகள் அனைத்தும் வரும் மார்ச் 8ஆம் தேதிக்குள் மும்பைக்கு வந்தாகவேண்டும் என பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்டவணையே இன்னும் வெளிவராத சூழலில் அனைத்து அணிகளுக்குமான விதிமுறைகளை பிசிசிஐ கடுமையாக்கியுள்ளது. அதாவது அனைத்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் வரும் மார்ச் 8ஆம் தேதிக்குள் மும்பைக்கு வரவேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது.
Trending
மும்பைக்கு வந்தவுடன் இந்திய வீரர்களுக்கு 3 நாள்கள் கடுமையான குவாரண்டைனும், அயல்நாட்டு வீரர்களுக்கு 5 நாட்கள் குவாரண்டைனும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் பின்னர் தான் அவர்கள் அந்தந்த அணிகளுடன் ஒன்று சேர அனுப்பப்படுவார்கள்.
இந்த குவாரண்டைனின் போது, ஒவ்வொரு வீரருக்கும் மூன்று முறை பிசிஆர் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த மூன்றிலும் நெகட்டீவ் என முடிவு வந்தால் தான் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சிகள் வரும் மார்ச் 14 - 15ஆம் தேதிகளில் தொடங்கவுள்ளன. இதற்காக மொத்தமாக 5 மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மும்பை வான்கடே, ப்ராபோர்ன் ஸ்டேடியம், டிஒய் பாட்டில் ஸ்டேடியம் ஆகியவை முதலில் தரப்படவுள்ளன. அதன்பின்னர் எம்சிஏ மைதானம் மற்றும் ரிலையன்ஸ் நிறூவனத்தின் ஜியோ மைதானமும் வீரர்களின் பயிற்சி முகாம்களுக்காக வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு அணியும் தனித்தனியாக ஹோட்டல்களை ஏற்கனவே புக் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now